Nikola Tesla was a Serbian American inventor, electrical engineer, mechanical engineer, and futurist best known for his contributions to the design of the modern alternating current electricity supply system.

 

டெஸ்லா என்ற மற(றை)க்கப்பட்ட விஞ்ஞானி!

டெஸ்லா என்ற மற(றை)க்கப்பட்ட விஞ்ஞானி!

உங்களுக்கு சில கேள்விகள்...

ரேடியோவை கண்டுபிடித்தவர் யார்?
X-Ray யை கண்டுபிடித்தவர் யார்?
Vaccum tube கண்டுபிடித்தவர் யார்?
நியான் பல்பை கண்டுபிடித்தவர் யார்?
Speedometer, Auto ignition system ஆகியவற்றை கண்டுபிடித்தவர் யார்?


சரி இப்போ ஒரு கதை..


”ஒரு ஊரில டெஸ்லான்னு ஒருத்தர் இருந்தாராம். அவரு கொஞ்சம் ஆர்வக்கோளாராம்.. சரியா!!, எப்பவும் எதையாவது ஒன்னை நோண்டிட்டே இருப்பாராம். இதை கழட்டி அதில மாட்டுறது, அதை கழட்டி இதில மாட்டுறதுன்னு எப்பவுமே செய்துட்டு இருப்பாராம்....இவரோட ஆர்வக்கோளாற பாத்த அவர் நண்பர்..ஏன்டா இவனே..இங்க ஒக்காந்து எல்லாத்தையும் நோண்டிட்டு ஆர்வக்கோளாறா இருக்கியே.. ஒன்ன மாதிரி ஆட்களை எல்லாம் அமெரிக்காவுல தேடுராங்களாம்.. நீ ஏன் அங்க போயி இதை எல்லாம் செய்யகூடாதுன்னு சொன்னாராம்”

”சரி, நம்ம அருமை நண்பன் சொல்லுறானேன்னு, இந்த..ஆர்வக்கோளாறும் அமெரிக்காவில அப்போ பேமஸா இருந்த எடிசன் லாப்ல அப்ளை பண்ணி எடிசன் கிட்ட அஸிஸ்டெண்ட் ஆ சேர்ந்தாராம்..”

“அங்க போயி நைட்டும் பகலும் வேலை பார்த்து பல புது புது கண்டுபிடிப்பா கண்டுபிடிச்சாராம்...ஆனா என்ன பிரச்சனைனா...டெஸ்லா ஒரு கேனையாம்...அதாவது இவரு கண்டுபிடிக்கிறதை எடிசன் நைசா எடுத்து எல்லாத்தையும் பேடண்டு செஞ்சு நிறைய பணம் சம்பாதிச்சாராம்..ஆனா ரொம்ப கவனமா, நம்ம டெஸ்லாவோட பெயரை எதிலையுமே சேக்கலையாம்..சரியா..”

”இதை கொஞ்ச நாள் கழிச்சு தெரிஞ்சு கிட்ட டெஸ்லா...எடிசன் கம்பெனிக்கு போட்டி கம்பெனியா இருந்த Westing house ங்கிற கம்பெனிக்கு போனாராம் நம்ம டெஸ்லா..”

“இவரு..சரியான ஜீனியஸ்(ஆனா கேனை) ன்னு தெரிஞ்ச அந்த கம்பெனிக்காரனுகளும் இவரு கண்டுபிடிச்ச பல கண்டுபிடிப்புகளுக்கும் நான் நீன்னு போட்டி போட்டு பேட்டெண்டு வாங்கிட்டாங்களாம்..ரொம்ப ரொம்ப சொற்ப பணத்தை ராயல்டியா இவருக்கு கொடுத்துட்டு...கோடி கோடியா அவங்க சுருட்டி இருக்காங்க...இதெப்படி இருக்கு”

”கடைசியில காசும் இல்லாமா சொத்தும் இல்லாம வறுமையில வாடி இறந்துட்டார் நம்ம டெஸ்லா..”

இவர் மெக்கானிக்கல் எஞ்சினியர் என்பது கூடுதல் தகவல்!!!